உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உடுமலை அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்

Published On 2022-11-17 08:07 GMT   |   Update On 2022-11-17 08:07 GMT
  • குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
  • அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடுமலை:

உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 50) .இவர் தோட்டத்து வேலைக்கு சென்றார். அப்போது காட்டுப்பன்றி ஒன்று அவரை கீழே தள்ளி காலில் கடித்தது .அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்வதால் வனத்துறையினர் இதை தடுக்க வேண்டும் அல்லது சுட அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுப்பன்றி மனிதர்களையே தாக்க ஆரம்பித்துள்ளதால் தோட்ட வேலைக்கு செல்வோர் பீதி அடைந்துள்ளனர் .எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News