உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தரம் மட்டுமே அடிப்படை - உறுதிமொழி ஏற்ற அத்திக்கடவு,அவிநாசி திட்ட பணியாளர்கள்

Published On 2022-11-14 04:36 GMT   |   Update On 2022-11-14 04:38 GMT
  • பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் எனஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
  • தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் நன்மதிப்பை உயர்த்துவேன் என உறுதிமொழியேற்றனர்.

திருப்பூர்:

ஆண்டுதோறும் நவம்பர் மாதம், தரத்தை உறுதிப்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் உற்பத்தி சார்ந்த மத்திய, மாநிலஅரசுத்துறையினர், தனியார் துறையினர் தங்களின் தரம் சார்ந்த விஷயங்களை உறுதிப்படுத்துவர்.

அதன்படி 1,652 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில், 1,065 கி.மீ., தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணி, 6 இடங்களில் நீரேற்ற நிலையங்கள் என பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணியை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் மேற்பார்வையில், எல் அண்டு டி நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் எனஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் தலைமையில், திட்டப்பணியை கண்காணிக்கும் பொறியாளர்கள், அன்னூரில் உள்ள 6-வது நீரேற்ற நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் உறுதிமொழியேற்றனர்.தரம் மட்டுமே அடிப்படை, தரத்தை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், உற்பத்தி திறன் மற்றும் வேலைத் திறனில் கவனம் செலுத்துவோம். தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் நன்மதிப்பை உயர்த்துவேன் என உறுதிமொழியேற்றனர்.

Tags:    

Similar News