உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பள்ளி மாணவர்கள் விவரம் - கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடக்கம்

Published On 2023-05-03 06:07 GMT   |   Update On 2023-05-03 06:07 GMT
  • ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக எண் வழங்கப்பட்டிருக்கும்.
  • இறுதி கட்ட கணக்கெடுப்பு மே மூன்றாம் வாரத்தில் இருந்து துவங்கப்படும்.

திருப்பூர்:

பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) மூலமாக தான், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் கலந்தாய்வு, ஹால்டிக்கெட் வழங்குதல் உட்பட அனைத்து வகையான கல்விசார் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.இதில், ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக எண் வழங்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு செல்ல எமிஸ் எண் பெற்றால் போதுமானது.

புதிய பள்ளிக்கு மாணவரின் அனைத்து விபரங்களும் பகிரப்படும். டி.சி., பெறாமல் பள்ளிக்கே வராத இடைநிற்றல் மாணவர்களின் விபரங்கள், எமிஸ் பொதுத்தளத்தில் இடம்பெறும். இம்மாணவர்களுக்கும் சேர்த்து ஹால்டிக்கெட் வழங்கியதால் தான் சமீபத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக புகார் எழுந்தது.இந்நிலையில் எமிஸ் பொதுத்தளத்தில் இடம்பெற்ற மாணவர்களின் நிலையை அறிய, பிரத்யேகமாக கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புக்கான செயலியில், இம்மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து போட்டோக்களுடன் அப்டேட் செய்யப்படுகிறது. மே இறுதியில் இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இக்கல்வியாண்டில் இரண்டு முறை கணக்கெடுப்பு நடத்தியதில் தொழில்நுட்ப கோளாறால் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தோர், 10-ம் வகுப்புக்கு பின் தொழிற்கல்வி சேர்ந்தோர் பெயர்கள், மீண்டும் பொதுத்தளத்தில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சிலர் வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இறுதி கட்ட கணக்கெடுப்பு மே மூன்றாம் வாரத்தில் இருந்து துவங்கப்படும். இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே பொதுத்தளத்தில் மொத்தம் இடம்பெற்ற மாணவர்கள், அவர்களின் தற்போதைய நிலை குறித்த புள்ளிவிபரங்கள் தெரியவரும் என்றனர்.

Tags:    

Similar News