உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம் - கலெக்டர் வினீத் தகவல்

Published On 2022-10-06 07:16 GMT   |   Update On 2022-10-06 07:16 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
  • தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நு ட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் காரீப் 2016 முதல் சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து, வந்த நிலையில் தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீடு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் ராபி, 2022-2023-ல் செயல்படுத்த அரசாணையின்படி காப்பீடு நிறுவனம் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் நெல், மக்காசோளம், பாசிப்பயறு, கொண்டைக்கடலை, நிலக்கடைலை, சோளம் மற்றும் பருத்தி போன்ற அறிவிக்கை செய்யப்பட்டு, விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் பயிர் கடன்பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்துகொள்ளலாம். இதற்காக விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கல் கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்று, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ சென்று பதிவு செய்துகொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு பிரீமியம் தொகை நெல் ஏக்கருக்கு ரூ.559, பாசிப்பயறு ஏக்கருக்கு ரூ.253.94 ஏக்கருக்கு செலுத்தி வருகிற 15-11-2022-க்குள் காப்பீடு செய்ய வேண்டும். மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.486.75, கொண்டைக்கடலை ரூ.269.25, பருத்தி ஏக்கருக்கு ரூ.693.60 பிரீமியம் தொகையாக செலுத்தி 30-11-2022-க்குள் காப்பீடு செய்ய வேண்டும். சோளம் ஏக்கருக்கு ரூ.38.61 வருகிற 15-12-2022-க்குள்ளும், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.470.25 பிரீமியம் தொகையாக செலுத்தி 31-12-2022-க்குள் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை உழவன் செயலி மூலமும், வட்டார அளவில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News