உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வடமாநில தொழிலாளர்களின் 285 அழைப்புகளுக்கு விளக்கம் அளித்த போலீசார்
- கடந்த இரண்டு நாட்களில் 285 அழைப்புகள் பெறப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
- அனைவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.
திருப்பூர்:
வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கட்டுபாட்டு அறைக்கு இதுவரை 285 அழைப்புகள் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
வடமாநில தொழிலாள ர்கள் தொடர்பான போலி விடியோ பீகார் மாநிலத்தில் பரப்ப பட்டதை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் அச்ச உணர்வை போக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கட்டுப்பாடு அறை செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களில் 285 அழைப்புகள் பெறப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உறவினர்கள் தொடர்பான அழைப்புகளும் வந்த நிலையில் அனைவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.