உள்ளூர் செய்திகள்

விழாவில் மாநகர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பேசிய காட்சி.

யோகாவால் மனமும், உள்ளமும் துாய்மையாகும் - போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பேச்சு

Published On 2023-03-08 07:56 GMT   |   Update On 2023-03-08 07:56 GMT
  • மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
  • மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.

திருப்பூர்:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, உலக சமுதாய சேவா சங்கம், சாமுண்டிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ரவீந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-

''ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும், 30 நிமிடமாவது யோகா பயிற்சி செய்ய வேண்டும், யோகாவால் மனமும், உள்ளமும் துாய்மையாகும்; ஞாபகசக்தியை அதிகரிக்கும். பயிற்சி முடித்த மாணவர்கள் யோகா பயிற்சி எடுக்க தவறக்கூடாது என்றார்.

அதன்பின், பயிற்சி முடித்த, 650 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.

என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர் சங்கமேஸ்வரன் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பாரதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News