உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்

Published On 2022-11-29 08:06 GMT   |   Update On 2022-11-29 08:06 GMT
  • பள்ளியில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் போயம்பாளையம் ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தோட்டத்துப்பாளையம் ஏ.பி.எஸ். அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம் ஏ.பி.எஸ். பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை பள்ளி தலைவர் பட்டுலிங்கம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முழுநேர காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் பழனிசாமி மற்றும் டாக்டர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதில் பள்ளியில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் ஏ.பி.எஸ். பள்ளி தாளாளர் சரவணக்குமார், நிர்வாக அலுவலர் யோகேந்திரன், பள்ளி முதல்வர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஏ.பி.எஸ். பள்ளியில் அடுத்தடுத்த சனிக்கிழமைகளிலும், அதைத்தொடர்ந்து மற்ற பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களின் நலன் கருதி நடத்தப்படும் என்று டாக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News