உள்ளூர் செய்திகள்

விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள ராட்டினம்.

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா -இன்று கொடியேற்றம்

Published On 2023-03-29 10:32 GMT   |   Update On 2023-03-29 10:32 GMT
  • கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 4-ந் தேதி நடைபெ றுகிறது.
  • இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

பெருமாநல்லூர் :

பெருமாநல்லூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கொண்ட த்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்தி ருவிழா வருகிற 4-ந் தேதி நடைபெ றுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலைய த்துறை சார்பில் கோவில் முன்புறம் கூடாரம் அமைத்தல் உள்பட பல முன்னேற்பாடு வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இன்று இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு கிராம சாந்தியும், இரவு 11 மணிக்கு குண்டம் விழாவின் கொடியேற்றம் அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

நாளை 30ந் தேதி காலை 7.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, காமதேனு வாகனத்தில் அம்மன் புற ப்பாடு, மண்டபக்கட்டளை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 8-ந்தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள். விழாவை யொட்டி போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருமாநல்லூர் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News