ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் - முதலமைச்சரின் அறிவிப்புக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ., நன்றி
- தமிழகத்தில் இரண்டு கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
- மாற்றுத்தி றனாளிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும், வரவேற்பும் கிடைத்துள்ளது.
திருப்பூர் :
ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நன்றிதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் இரண்டு கால்கள் இழந்த மாற்றுத்தி றனாளிகளுக்கு அரசு நிதியில் இருந்து மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளும், தங்களுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட வேண்டுமென அதிகப்ப டியான கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. அதனடி ப்படையில் ஒரு கால் இழந்த மாற்றுத்திற னாளிகளுக்கும், அரசு நிதியிலிருந்தோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தோ வழங்கிட வழிவகை செய்து தர வேண்டுமென கடந்த 2.7.2022 தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் , அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.
எனது கோரிக்கையினை ஏற்று தற்போது நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கையின் போது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். இந்த அறிவிப்பினால் மாற்றுத்தி றனாளிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும், வரவேற்பும் கிடைத்துள்ளது.
எனது கோரிக்கையினை தாயுள்ளத்துடன் பரிசீலித்து, மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் சட்டப்பேரவையில் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் , துறை சார் அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செல்வராஜ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.