உள்ளூர் செய்திகள்
- நாளை 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.
திருப்பூர்:
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பழ.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கருவலூர் துணை மின் நிலையத்தில் நாளை 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.