உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரி தாராபுரம் நகர்மன்ற தலைவரிடம் பொதுமக்கள் மனு

Published On 2023-11-08 10:30 GMT   |   Update On 2023-11-08 10:30 GMT
  • குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.
  • கால்வாய் முறையாக தூா்வாரப்படாததால் கழிவுநீா் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தாராபுரம்:

தாராபுரம் நகராட்சியில் கழிவுநீா் கால்வாயைத் தூா்வார வலியுறுத்தி பொதுமக்கள் நகரமன்றத்தலைவா் பாப்புக்கண்ணனிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து தாராபுரம் நகராட்சி நேதாஜி வீதி ஏபிஜே.அப்துல் கலாம் சமூக நல்லிணக்க நற்பணி மன்றத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தாராபுரம் நகராட்சி 5 மற்றும் 14 வது வாா்டுகளுக்குள்பட்ட நேரு நகா், நேதாஜி வீதி, சங்கா் மில் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகளால் குறுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.

கழிவுநீா் கால்வாய் குறுக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது கழிவுநீா் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், கழிவுநீா் கால்வாய் முறையாக தூா்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி கழிவுநீா் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறும் நிலை காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று அபாயமும் காணப்படுகிறது.

எனவே கழிவுநீா் கால்வாயை சீரமைக்கவும், அடிக்கடி கழிவுநீா் கால்வாயை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News