உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு மனு

Published On 2022-08-23 06:17 GMT   |   Update On 2022-08-23 06:17 GMT
  • சில ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
  • ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான அரிசியினை வழங்க வேண்டும்

அனுப்பர்பாளையம் :

ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்எண்ணெய், பருப்பு, கோதுமை வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு சில ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே தரமான ரேஷன் அரிசியை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அதன்படி அதிகாரிகள் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்து தரமற்ற அரிசி இருந்தால் அவற்றை வினியோகம் செய்ய வேண்டாம் என்றும், தரமான அரிசி வழங்குமாறும் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளிலுள்ள ரேஷன் கடைகளில் வழங்கும் இலவச அரிசி பயன்படுத்த முடியாத நிலையில் தரமற்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான அரிசியினை வழங்க வேண்டும் எனவும், மண்எண்ணெய் போதிய அளவில் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத்தலைவர் ரங்கசாமி, செயலாளர் பொங்குபாளையம் அப்புசாமி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News