பதிவுக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
- கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது.
- விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பதிவுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து, கட்டுமானத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக இந்திய கட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,
தமிழக அரசு அறிவித்து ள்ள பதிவுக் கட்டண உயர்வு அபரிமிதமாக உள்ளது. கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது. இதனால் பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அரசுக்கு தெரிவிக்காமலேயே பல பணிகள் நிறைவேற வாய்ப்புள்ளது.குடும்பத்தினர் அல்லாதோர் பொது அதிகாரம் பெறும்போது சொத்தின் மதிப்பில் 1 சதவீத கட்டணம் என அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோரை முடக்கிவிடும்.
விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்தை அடமானம் வைக்கும்போது அதற்கும் 50 சதவீத கட்டண உயர்வு என்பது ஏற்கத்தக்கதல்ல.தொழில் செய்வோரையும், மக்களையும் வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.