குடிமங்கலம் நால் ரோட்டில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
- குடிமங்கலம் நால்ரோடு வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
- சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன.
உடுமலை :
உடுமலையிலிருந்து பல்லடம் திருப்பூர் செல்லும் சாலை, பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை ஆகியவை சந்திக்கும் முக்கியமான இடமாக குடிமங்கலம் நால்ரோடு பகுதி உள்ளது. இந்த வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக உடுமலை பகுதியில் இருந்து சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன. மேலும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் குடிமங்கலம் நால்ரோடு பகுதி வந்து பஸ் ஏறி செல்கின்றனர். நால்ரோடு பகுதி மிகவும் விசாலமாகவும் ரவுண்டான அமைக்கும் வகையிலும் உள்ளது இதனால் சாலை கடப்பதற்கு வேகமாக வரும் வாகனங்கள் பாதசாரிகளின் மீது மோதி விடுகின்றன.
இங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. எனவே குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.