உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்த வியாபாரிகள்.

பழங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க கோரி சாலையோர வியாபாரிகள் மனு

Published On 2022-07-14 11:08 GMT   |   Update On 2022-07-14 11:08 GMT
  • போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் சாலையோரம் பழங்களை வியாபாரம் செய்து வருகிறோம்.
  • அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலன் திருப்பூர் மாவட்ட வருவாய்த்துைற அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் திருப்பூர்பல்லடம் ரோடு தெற்கு உழவர்சந்தை அருகே சாலையோரம் காலை 4மணி முதல் 8மணி வரை பழங்களை விற்பனை செய்து வருகிறோம். ேபாக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 29-6-2022 அன்று அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். உழவர்சந்தைக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள சில தனியார் கடை உரிமையாளர்கள் நாங்கள் காலை 9மணிக்கு மேல்தான் திறப்போம். அதுவரை கடைவாசலில் வியாபாரம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பேரில் வியாபாரம் செய்து வந்த நிலையில் சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி உள்ளது.

இதனால் சிறு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News