உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் வழியாக இயக்கப்படும் 10 ரெயில்களின் வழித்தடம்-நேரம் மாற்றம்

Published On 2022-09-01 05:49 GMT   |   Update On 2022-09-01 05:49 GMT
  • திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் மேலாண்மை பணி நடக்கிறது.
  • டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

திருப்பூர் :

சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள, திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் மின்வழித்தடம், தண்டவாளம் சீரமைப்பு, பொறியியல் மேலாண்மை பணி இன்று, நாளை 2-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும், 10 ரெயில்களின் நேரம், வழித்தடம் மாற்றப்படுகிறது. அவ்வகையில் இன்று ஆலப்புழா - தன்பாத், ஈரோடு - சென்னை - ஏற்காடு எக்ஸ்பிரஸ், திருப்பத்தூர் நிலையத்தில் நிற்காது. நாளை 2-ந் தேதி கன்னியாகுமரி - பெங்களூரு, கோவை - ராஜ்கோட், கொச்சுவேலி - மைசூரு, மங்களூரு - சென்னை வெஸ்ட்கோஸ்ட், திருப்பத்தூரில் நிற்காது.இந்த ரெயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

2 நாட்களும் ஈரோடு - ஜோலார்பேட்டை பாசஞ்சர் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News