உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

எண்ணெய்வித்து மரப்பயிர்கள் வளர்க்க மானியம்

Published On 2023-06-14 11:14 GMT   |   Update On 2023-06-14 11:14 GMT
  • விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது.
  • தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் கள ஆய்வு செய்தார்.

 காங்கயம் :

தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம், எண்ணெய் வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது. இது குறித்து திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் கள ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் எண்ணெய் வித்து மரபயிர்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி வேம்பு பயிருக்கு எக்டேருக்கு ரூ.17 ஆயிரமும், புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நடவு செய்த முதல் 3 ஆண்டுகளுக்கு ஊடுபயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து காங்கயம் வட்டாரம் வீரணம்பாளையம் கிராமத்தில் கணேசன் என்ற விவசாயி 2021-22-ம் ஆண்டில் நடவு செய்துள்ள வேம்பு எண்ணெய்வித்து, மரப்பயிர் கன்றுகளை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி மற்றும் வேளாண்மை அலுவலர் ரேவதி ஆகி–யோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News