திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா நாளை நடக்கிறது
- திறப்பு விழா நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் திட்ட விளக்க உரையாற்றுகிறார்.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலா–ளர் ககன் தீப் சிங்பேடி திட்ட விளக்க உரையாற்றுகிறார்.
புதிய கட்டிடத்தை திறந்து மருத்துவ சேவையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் சுப்பராயன் எம்.பி., க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.