புகையிலை பொருட்களை விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது - போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
- மாநகர போலீஸ் கமிஷனர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
- கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை கோவை சிறையில் உள்ள சரவணனிடம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.