உள்ளூர் செய்திகள்
வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா
- கடந்த ஒரு மாத காலமாக தினந்தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
- சிறப்பு செய்யும் விதமாக அரங்கேற்ற விழா நடைபெற்றது.
வீரபாண்டி :
திருப்பூர் அருகே உகாயனூர் ஊராட்சியில் உள்ள நல்லகாளிபாளையத்தில் மங்கை வள்ளி கும்மி 34-வது குழுவினரின் அரங்கேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஒரு மாத காலமாக தினந்தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் நன்றாக பழகிய நிலையில் அதை சிறப்பு செய்யும் விதமாக அரங்கேற்ற விழா நடைபெற்றது.
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை கற்றுக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடப்பட்டு பயிற்சி தரப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.