உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

இணையதளத்தில் எடிட் ஆப்சன் இல்லாததால் வரி வசூல் பதிவை முறைபடுத்த முடியாமல் தவிக்கும் கிராம செயலர்கள்

Published On 2023-05-26 07:00 GMT   |   Update On 2023-05-26 07:00 GMT
  • ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்களே கம்ப்யூட்டர்களை ஆப்ரேட் செய்கின்றனர்.
  • வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடுமலை :

ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை, இணைய வழியில் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி மக்களிடம் இருந்து நேரடியாக வரி இனங்களை வசூல் செய்யும் பணி ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் கிராம மக்கள், vptax.tnrd.tn.gov.in என்னும் இணையதளம் வாயிலாக வரி செலுத்தலாம்.

இதற்காக வீட்டு உரிமையாளர்கள், பயனாளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளால் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இணையதளத்தில் எடிட் ஆப்சன் கிடையாது. இதனால், வரி வசூல் பதிவை முறைபடுத்த முடியாமல் உடுமலை சுற்றுப்பகுதி கிராமச் செயலர்கள் தவித்து வருகின்றனர்.அவ்வாறு ஆன்லைன் வாயிலாக வரி வசூல் செய்யப்பட்டாலும் பதிவேடுகளை பராமரிக்கும் கட்டாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்களே கம்ப்யூட்டர்களை ஆப்ரேட் செய்கின்றனர். ஆன்லைன் வாயிலாக வரி இனங்கள் செலுத்தப்பட்டாலும் அந்த விபரங்களை பதிவேட்டில் பராமரிக்க வேண்டியுள்ளது.இதனால் முதற்கட்டமாக வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்களை முறையாக பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பதிவேடுகளுடன் கம்ப்யூட்டரிலும், விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவதால் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது.

அதேபோல இணையதளத்தில் எடிட் ஆப்சன் கிடையாது. அதனால் ஆன்லைன் பதிவில் பிழை ஏற்பட்டால் அதனை சரிபடுத்த முடியாது. தற்போதைய சூழலில் வரி இனங்கள் செலுத்தியதிற்கு ரசீது வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இக்காரணங்களால் ஊராட்சிகளில் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த காலதாமதம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News