உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மருத்துவ காப்பீடு அட்டை வழங்க நெசவாளர்கள் வலியுறுத்தல்

Published On 2023-04-15 08:12 GMT   |   Update On 2023-04-15 08:12 GMT
  • நெசவு பயிற்சி மையம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
  • இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

திருப்பூர் :

சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொட ரில் கைத்தறி, துணிநூல் துறை மானிய கோரிக்கை யில் அமைச்சர் காந்தி, புதிய திட்டங்களை அறி வித்துள்ளார்.

இதுகுறித்து கோவை, திருப்பூர், மாவட்டநெச வாளர் கூட்டுறவு சங்கங்க ளின் சம்மேளன தலைவர் ஜெகநாதன் கூறியதாவது:- இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மையம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம், 140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். இதனால், இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அது போல் கூட்டுறவு சங்கங்க ளில் உள்ள கைத்தறிநெச வாளர்களுக்கு 10 சத வீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதும் வர வேற்க வேண்டிய அம்சம்.பட்டின் விலை அதிகமாக உள்ளது. கூட்டு றவு சங்கம் சார்பில், பட்டுச்சேலை நெய்வதற்கு பட்டு, சரிகை,நூல் ஆகியவை போதிய அளவு வழங்கப்படுவதில்லை.மிக குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, வாரத்திற்கு இரண்டு சேலைதான் நெய்ய முடியும். இது வாழ்வாதா ரத்துக்கு போது மானதல்ல.

வாரத்திற்கு 4 முதல் 5 சேலைகள் நெய்யும் அளவிற்கு மூலப்பொரு ட்கள் வழங்க வேண்டும். கைத்தறி ரகங்க ளை சந்தை படுத்த வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அது பெயரளவிற்கு இல்லாமல் முறையாக நடத்தினால் நன்றாக இருக்கும்.நெச வாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை மத்திய அரசு சார்பில், வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், மருத்துவமனை சென்றாலும் சிகிச்சை பெறமுடியவில்லை.

எனவே மாநில அரசு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். என பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News