உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வாட்ஸ்அப் புகார் எண்ணை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் -கலெக்டரிடம் கோரிக்கை மனு

Published On 2023-05-23 04:33 GMT   |   Update On 2023-05-23 04:33 GMT
  • கடந்த 2019-ம் ஆண்டு பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 9700041114 என்ற வாட்ஸ்-அப் புகார் எண் அறிமுகம் செய்யப்பட்டது.
  • கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் புகார் எண் சுத்தமாக செயல்படவில்லை.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக கிறிஸ்துராஜ் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க 9700041114 என்ற வாட்ஸ்-அப் புகார் எண்ணுக்கு வாட்ஸ்-அப் செய்தியாக தெரிவிக்க அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வேலை செய்யாத மாவட்ட கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் புகார் எண் சுத்தமாக செயல்படவில்லை. எனவே உடனடியாக வாட்ஸ்அப் எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் விரைவாக தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட புதிய கலெக்டர் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் எண் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தற்காலிகமாக தடைபட்டுள்ளது. ஓரிரு நாளில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் மாவட்ட கலெக்டர் அலுவலக எண்ணில் தொடர்ச்சியாக பொது மக்கள் புகார் அளிக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News