பல்லடத்தில் உருக்காலைக்கு எதிராக பெண்கள் 3-வது நாளாக போராட்டம்
- கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை பாடல்களாக பாடி கும்மியடித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 3 வது நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், காத்திருப்புப் போராட்டத்தில், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை பாடல்களாக பாடி கும்மியடித்தனர்.
இது குறித்து அனுப்பட்டி பொதுமக்கள் கூறியதாவது: பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இரும்பு உருக்காலையின் உரிமத்தை ரத்து செய்து ஆலையை மூட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.பல்வேறு போராட்டங்களில் தொட ர்ந்து ஈடுபடஉள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.