உள்ளூர் செய்திகள்

தக்காளி விலை குறைவு

Published On 2023-08-21 10:18 GMT   |   Update On 2023-08-21 10:18 GMT
  • இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
  • தருமபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

தருமபுரி,

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.

இதனால் தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ ரூ.130 முதல் ரூ.160 வரையும், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் தக்காளியின் வரத்து அதிகரிக்க உயர்ந்ததால் விலை படிப்படியாக குறைந்து கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பெல்ரம்பட்டி, கரகூர், திருமல்வாடி, உசிலம்பட்டி, 5-வது மைல், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், அதேபோல் ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் மேலும் தக்காளி விலை குறைந்து 15 கிலோ கூடை தக்காளி 400 ரூபாயும் , 28 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி 800 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தருமபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வரத்து அதிகரித்து விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கினால் மேலும் விலை குறைய வாய்ப்பு ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News