கொல்லிமலை, ஏலகிரிக்கு மக்கள் அதிகம் செல்லும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்
- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
- சுற்றுலாத்துறையின் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகியவை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொல்லிமலை, ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை ஆகிய மலைகளுக்கும் அதிக அளவில் செல்லும் வகையில் சுற்றுலாத்துறையின் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகளுக்கு நிறைவான மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தும் வகையில் சாகச சுற்றுலா மேம்பாட்டு பணிகள் இந்த மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.