வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உற்பத்தி குறைவால் பூக்களின் விலை உயர்வு
- வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உற்பத்தி குறைவு
- பூக்களின் விலை உயர்வு
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,குளத்துப்பாளையம், காளிபாளையம் ,வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி ,முல்லை, சம்பங்கி ,அரளி,ரோஜா ,செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களைப் பறித்து கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் ,அருகில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர் .பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.
கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். தற்போது குண்டுமல்லி ரூ.900- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.800- க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும் வாங்கிச் சென்றனர். ஜப்பசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் வருவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.