உதயநிதி பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்- ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்க வேண்டும்.
- அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சங்கரன்கோவிலில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் முழு நேர உணவு வழங்குதல், வாசுதேவநல்லூரில் உள்ள சிறப்பு இல்லத்தில் முழு நேர உணவு வழங்குதல், வடக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் மற்றும் குழந்தைகள் காப்பு பெட்டகம் வழங்குதல்,
வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு சீருடை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.
மேலும் பிறந்தநாள் அன்று ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இளைஞர் அணி சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் பங்கு குறித்து தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் அந்தந்த பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.