மீஞ்சூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்
- உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்
- அனைத்து வார்டுகளிலும் உள்ள வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து பெயர் சேர்க்க ஆலோசனை
பொன்னேரி:
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தலைவர் சிவராமன், நகர இளைஞரணி செயலாளர் மில்லர், முன்னாள் பேரூர் கழக செயலாளர் லெனின், மாவட்ட பிரதிநிதி சசிகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆர்பார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார் வே.ஆனந்தகுமார் சிறப்புரையாற்றினர். இதில் பேரூராட்சி 18 வார்டுகளிலும் உள்ள கழக செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்குவது, மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கௌரவித்தல், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நகராட்சியில் அடங்கிய அனைத்து வார்டுகளிலும் உள்ள வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கான பிஎல்ஏ முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் பேரூர் நிர்வாகிகள், முன்னாள் துணை செயலாளர் ஜோசப், துணைச் செயலாளர் கணேஷ், ஒன்றிய பிரதிநிதி திருப்பதி உட்பட இளைஞர்அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.