வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா
- வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்து, பள்ளியின் விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பங்கேற்று, ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைத்து, போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார்.
இதில் மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.
6 முதல் 8 வயது, 9 மற்றும் 10 வயது, 11 முதல் 13 வயது, 14 முதல் 16 வயது என ஆனந்த், தீரஜ், பிரேம், சாந்தி என 4 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சாந்தி குழுவிற்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அசோக் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
இதில், அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தனபால், ஓசூர், பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி வேளாங்கண்ணி பள்ளிகளின் முதல்வர்கள், இன்ஜினியர் சரவணன், தொழிலதிபர்கள் ரகுராமன், வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.