உள்ளூர் செய்திகள்

வேலூரில் 39 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்

Published On 2022-09-18 14:29 IST   |   Update On 2022-09-18 14:29:00 IST
  • வீடு வீடாக பணி தீவிரம்
  • சனி, ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு பணியாக நடக்கிறது

வேலூர்:

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க வீடு வீடாக சேகரிப்புப் பணி தொடங்கியது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத் தல்படி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற் காக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று படிவம் 6பி-இல் வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெற்று கருடா செயலி மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 12,68,725 வாக்கா ளர்களில் இதுவரை 4,99,694 பேர் மட்டுமே ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

மாவட்டத்தில் 39.39 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பணிகளை விரைவாக முடிக்க சென்னை முதன்மைத்தேர்தல் அலுவலர், அரசு முதன்மை செயலர் ஆகியோர் மாவட்ட நிர்வாகத் துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்கள் அதனை உடனடியாக இணைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சனி, ஞாயிறு (செப்.17, 18) ஆகிய இருநாள்களிலும் சிறப்பு பணியாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வீடு வீடாகச் சென்று, படிவம் 6பி பெற்று கருடா செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அறி விக்கப்பட்டிருந்ததது.

அதனடிப்படையில், வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அலுவலர்களின் வீடுவீ டாக சேகரிப்புப் பணியடில் சனிக்கிழமை ஈடுபட்டனர். இந்த பணி 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News