உள்ளூர் செய்திகள்
தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.
- அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
- நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஜெபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
கன்னியாகுமரி:
பத்மநாபபுரம் தொகுதி திருவட்டார் வட்டாரத்திற்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் ஆசாரிபொத்தை - கடமனான்குழி செல்லும் இணைப்பு சாலையில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.90 லட்சம் ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். பின்னர் அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஜெபா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், செறுகோல் ஊராட்சி முன்னாள் தலைவர் கனகராஜ், முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் செலின் மேரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.