திருவெண்ணெய்நல்லூர் அருகே திருட முயன்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஓப்படைப்பு
- நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. .
- 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்தது.இதற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்இதில் திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.