உள்ளூர் செய்திகள்
தென்காசியில் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் வில்லிசை கலை நிகழ்ச்சி
- பள்ளிக்கல்வி துறை சார்பில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- வில்லுப்பாட்டு கலைஞர்களுக்கு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் கேடயம் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி இ.சி.ஈ ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் , பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ராமலிங்கம் நடுநிலைப் பள்ளியின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் யு.எஸ்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் தனிநபர் நடனம், ஜோடி நடனம், டேய் ப்ளூ, மைம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து பண்பொழி மாரியம்மாளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பங்கேற்ற மாணவ -மாணவிகளுக்கும், வில்லுப்பாட்டு கலைஞர்களுக்கும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.