உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் பழனி பேசியபோது எடுத்தபடம்.

பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக திகழ செய்ய வேண்டும்: கலெக்டர் பழனி அறிவுறுத்தல்

Published On 2023-10-20 07:40 GMT   |   Update On 2023-10-20 07:40 GMT
  • பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி சரியான வழிகாட்டுதலுடன் பயிற்றுவிக்க வேண்டும்.
  • மகாலட்சுமி, தலைமையாசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது, நடப்பாண்டு காலாண்டு தேர்ச்சி விகிதம் குறித்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களு டான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர், கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மேம்படுவதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்களின் காலாண்டு தேர்வின் தேர்ச்சி விகிதம் குறித்து ஒவ்வொரு தலைமையாசிரியர்களுடன் இன்றைய தினம் விரிவாக கேட்டறியப்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மொழிப்பாடங்கள் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி சரியான வழிகாட்டுதலுடன் பயிற்றுவிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், வாராந்திர தேர்வுகள் போன்ற தவறாமல் பள்ளிகளில் நடத்திட வேண்டும். 2023-2024 ஆம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் முதன்மை மாவட்டமாகத் திகழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவசுப்பிரமணியம், மகாலட்சுமி, தலைமையாசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News