வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு
- அருப்புக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்படி கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு ஆசிரியர்களிடம் மாண வர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்ததுடன் கழிவறைகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். கழிவறையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், குல்லூர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் மானிய விலையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் கவுசிகாநதி உழவர் உற்பத்தியாளர் நிறு வனத்தின் ஒருங்கிணைந்த முதல்நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள், தரம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.
குல்லூர்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருந்துகள், அங்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
குல்லூர்சந்தையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு ரூ.340 லட்சம் மதிப்பில் 68 தொகுப்பு வீடுகளும், ரூ.11.30 லட்சம் மதிப்பில் 2 தனி வீடுகளும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவல, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.