தி.மு.க. பெண் கவுன்சிலர்-கணவர் மீது தாக்குதல்
- தி.மு.க. பெண் கவுன்சிலர்-கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் நேருஜி நகரை சேர்ந்தவர் தி.மு.க. நிர்வாகி மூர்த்தி (வயது33). இவரது மனைவி ஆஷா (31). இவர் விருதுநகர் நகராட்சியில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.
நேற்று இவரது வார்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனை ஆஷா தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும், மகேஷ்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஆஷா தங்களை தான் வீடியோ எடுப்பதாக நினைத்து மாரீஸ்வரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா, அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த 2பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்றனர். இந்த பிரச்சினையில் தானும் தாக்கப்பட்டதாக மாரீஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.