- வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் சமையலயறை கட்டும் பணிகளையும், திருவண்ணா மலை ஊராட்சியில் என்.சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் நேய பள்ளி கட்டிடம் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.31.30 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூவாணி கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு தேனீ வளர்ப்பில் பயன்பெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.