உள்ளூர் செய்திகள்

மஞ்சளாறு அணை நீர் கொள்ளளவை காட்டும் படம்.

51 அடியை எட்டிய நீர்மட்டம்: மஞ்சளாறு அணையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2023-09-22 05:50 GMT   |   Update On 2023-09-22 05:50 GMT
  • 53 அடியை எட்டியதும் 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.
  • கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடைதொடரும் என அறிவித்துள்ளனர்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் உயரம் 57 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படு கிறது.

கொடைக்கானல் பகுதியில் பெய்யும் மழை யால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக அக்டோபர் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கி யுள்ளது.

இன்று காலை நிலவர ப்படி 51.20 அடி நீர்மட்டம் உள்ளது. இதனைதொடர்ந்து தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரான்கோட்டை மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 53 அடியை எட்டியதும் 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.

தற்போது அணைக்கு 86 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 300 கனஅடியில் இருந்து 928 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டமும் 118.80 அடியிலிருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 333 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.61 அடியாக உள்ளது. 19 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை யால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடைதொடரும் என அறிவித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

பெரியாறு 13.2, தேக்கடி 2.4, சண்முகாநதி 1.8, போடி 3, மஞ்சளாறு 7, சோத்து ப்பாறை 3, வீரபாண்டி 4.2, அரண்மனைப்புதூர் 13 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News