உள்ளூர் செய்திகள்
மேரிமாதா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
- 2022-2023ம் ஆண்டு முதலாம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தேவதானப்பட்டி:
மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023ம் ஆண்டு முதலாம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
துைண பேராசிரியர் பிந்து வரவேற்புரை யாற்றினார். கல்லூரி முதல்வர் ஐசக் தொடக்க விழா பேருரையாற்றினார். இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருதி அவர்களை சரியான பாதைக்கு கல்லூரி நிர்வாகம் அழைத்துச் செல்லும் என்றும் உறுதி அளித்தார்.
கல்லூரியின் துணை இயக்குனர் ஜோசப் வில்லியம், இயற்பியல் துறை தலைவர் சாந்தினி, பொறுப்பு தலைவர் பானுபிரபா உள்பட பலர் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று பேசினர்.
மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.