உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்-கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-07-25 08:58 GMT   |   Update On 2023-07-25 08:58 GMT
  • சித்தன் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
  • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

செங்கோட்டை:

செங்கோட்டையில் ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி தலைவா் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் பொன்னுத்துரை, இணைச்செயலாளா் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ஹரிஹரநாராயணன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் சித்தன் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு செங்கோட்டை மற்றும் புளியரை, அரசு பள்ளிகளில் பயின்ற 10, 11 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸியில் தன்னை கவுரவ உறுப்பினாக இணைத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் ஷேக்சலீம், மாவட்ட கம்யூனிட்டி சேர்மன் நந்து என்ற அருணாசலம், கிளப் நிர்வாகிகள், உறுப்பினா்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா். முடிவில் செயலாளா் கோபிநாத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News