உள்ளூர் செய்திகள்

குற்றாலத்தில் கார்த்திகை சோமவாரம் கடைபிடித்த பெண்கள்

Published On 2023-11-20 08:51 GMT   |   Update On 2023-11-20 08:51 GMT
  • கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • நாகர் சிலைகளுக்கு பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தென்காசி:

கார்த்திகை மாதம் என்றாலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். அதேபோல் கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த ஆண்டு சோமவாரம் இன்று காலை முதல் கடைபிடிக்கப்பட்டது.

இதற்காக குற்றாலத்தில் அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அலைமோதியது. குற்றாலநாதர் கோவில் அருகே உள்ள நாகர் சிலைகளுக்கு பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்து பெண்கள் கற்பூரம் ஏற்றி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சோமவரத்தை கடைப்பிடித்தனர்.

Tags:    

Similar News