உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் 22 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை:அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
- இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
- சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி 22 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான பற்று அட்டையை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.