இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
- ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல்.
- பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார்.
மதுபானக் கொள்கை முறைகேடு சிபிஐ வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார்.