இந்தியா

டெல்லியில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-12-09 03:05 GMT   |   Update On 2024-12-09 03:09 GMT
  • டெல்லி ஆர்.கே.புரம், பஸ்ஷிம் விஹார் பகுதியில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
  • வெடிகுண்டு மிரட்டலையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

டெல்லியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி ஆர்.கே.புரம், பஸ்ஷிம் விஹார் பகுதியில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இரண்டு பள்ளிகளிலும் சோதனை நடந்து வருகிறது, சந்தேகத்திற்குரிய எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News