செய்திகள்
லண்டனில் இருந்து விஜய்மல்லையா விரைவில் இந்தியா கொண்டுவரப்படுகிறார்
இங்கிலாந்து அதிகாரிகளுடான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து லண்டனில் இருந்து விஜய்மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார்.
புதுடெல்லி:
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. கிங்பிஷர் நிறுவனரான இவர் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்த ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவானார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
விஜய்மல்லையாவை கடந்த 18-ந்தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்தது. பின்னர் ஜாமீனில் விடுதலையானார். அவரை இந்தியா கொண்டு வருவதற்காக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சமீபத்தில் லண்டன் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
இந்த நிலையில் இங்கிலாந்து அதிகாரிகள் குழு டெல்லி வந்தது. அந்த குழுவினருடன் உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதன்படி அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார். இது விஜய்மல்லையாவுக்கு பின்னடைவாகும்.