செய்திகள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி:

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சமீப காலமாக ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அறக்கட்டளை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தியா வரும் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்.
டெல்லி வரும் ஒபாமா, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். அதைத்தொடர்ந்து,
ஒபாமா அறக்கட்டளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டவுன் ஹால் கூட்டத்தில பராக் ஒபாமா பங்கேற்று உரையாற்றுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் இருந்து வந்துள்ள இளைஞர் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஒபாமா, அதன்பின்னர் பிரதமர் மோடியை முதல் தடவையாக சந்தித்து பேசுகிறார் என்பதும், இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் நாட்டுக்கு செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.