செய்திகள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு முப்தி முகமத் சயீத் நினைவு விருது

Published On 2018-01-08 12:02 GMT   |   Update On 2018-01-08 12:02 GMT
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு முன்னாள் முதல்-மந்திரி முப்தி முகமத் சயீத் நினைவு விருதினை வழங்கி ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி சிறப்பித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் முதல்-மந்திரியாக இரண்டு முறை பதவி வகித்தவர் முப்தி முகமத் சயீத் 7-1-2016 அன்று  மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து இவரது மகள் மெகபூபா முப்தி தற்போது அம்மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார். 

மக்கள் ஜனநாயக கட்சியை தோற்றுவித்த முப்தி முகமத் சயீத் நினைவாக அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில், முதல்முறையாக முப்தி முகமத் சையத் நினைவு விருதுக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

ஜம்மு நகரில் உள்ள சோராவர் சிங் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு முப்தி முகமத் சையத் நினைவு விருதினை ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி வழங்கினார்.

விருதை பெற்றுக்கொண்டு ஏற்புரையாற்றிய நிதிஷ் குமார், 'ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த விருது தனக்கும் பீகார் மாநிலத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். 

மிகப்பெரிய அரசியல் தலைவரான மறைந்த முப்தி முகமத் சயீத் இந்திய உள்துறை மந்திரியாக பொறுப்பு வகித்த ஒரே இஸ்லாமியர் என்ற முறையில் அவர் எப்போதுமே அமைதிக்காக உழைத்தார். எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருந்தால் எவ்வித பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்பது அவரது தாரக மந்திரமாக இருந்தது.

பீகார் மாநிலத்தில் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி வளர்ச்சியை நோக்கிய அமைதியான பயணம் என்பதுதான் எனது முக்கிய குறிக்கோள்' என்று கூறினார். #tamilnews

Tags:    

Similar News