செய்திகள்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்பட்டது

Published On 2018-07-27 22:38 GMT   |   Update On 2018-07-27 22:38 GMT
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்பட்டது. #Tirupati #TirupatiTemple #ChandraGrahan
திருமலை:

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு தொடங்கியது. இந்த சந்திர கிரகணம், நள்ளிரவு வரை நீடித்து இருக்கும். இது சுமார் 6 மணி நேரங்களுக்கு மேல் நீடிக்கும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நேற்று இரவு 11.54 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் இன்று அதிகாலை 3.49 மணி வரை நடைபெற்றது.

கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன் ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.15 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது.

கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

இதையொட்டி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்தது. திருமலையில் செயல்பட்டு வரும் அன்னதான கூடங்களும் நேற்று மாலை 5 மணிக்கு மேல் மூடப்பட்டது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் 12 மணி நேரம் மூடப்பட்டது. #Tirupati #TirupatiTemple #ChandraGrahan
Tags:    

Similar News