செய்திகள்
மகாராஷ்டிராவில் 6 வாகனங்களுக்கு தீ வைப்பு- நக்சலைட்கள் அட்டூழியம்
மகாராஷ்டிராவில் கட்டுமானப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்ட டிராக்டர்கள், ஜேசிபி போன்ற வாகனங்களுக்கு நக்சலைட்கள் தீ வைத்துள்ளனர். #Maharashtra #Naxalsblaze
கட்சிரோலி:
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று காலை சாலையோரம் கட்டிட வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு நக்சலைட்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் கோர்சி தாலுகாவில் டோங்கார்கான் புறக்காவல் நிலையத்திற்கு அருகே நடந்துள்ளது.
12 நபர்கள் கொண்ட மாவோயிஸ்டுகள் குழு, கட்டுமான பணிகளுக்காக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த 4 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபிக்கு தீ வைத்துள்ளனர். மேலும் இவர்கள் சாலையில் மரக் கிளைகளை வெட்டிப்போட்டு போக்குவரத்தினை தடை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவோயிஸ்டு அமைப்பின் பேனர்கள் கிடந்துள்ளன. இதன்மூலம், கட்சிரோலியின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஜனவரி 25 முதல் 31 வரை நக்சல் வாரமாக மாவோயிஸ்டுகள் அனுசரிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் நக்சலைட்கள், கூட்டங்கள் நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் பொது சொத்துக்கள், சாலைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மீதான தாக்குதல்களை நடத்துதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மறு ஆய்வு செய்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. #Maharashtra #Naxalsblaze